இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு தரப்பாக ஈழத் தமிழர்கள் மாறவேண்டும்! உருத்திரகுமாரன்

#SriLanka #Tamil People #Vanni #sri lanka tamil news #srilankan politics
Mayoorikka
2 years ago
இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு தரப்பாக ஈழத் தமிழர்கள் மாறவேண்டும்!  உருத்திரகுமாரன்

இலங்கைத் தீவின் புவிசார் அரசியலில் ஈழத் தமிழ் மக்கள் பங்காளராக, தீவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் ஒரு தரப்பாக மாறவேண்டும். இதற்கு தேவையான அரசியல், பொருளாதார இராஜதந்திரநகர்வுகளை நன்கு வடிவமைக்கப்பட்ட வியூகத்துடன் நாம்மேற்கொள்ள வேண்டும் என நா.த.அ பிரதமர் உருத்திரகுமாரன் தெரிவித்தார்.

 2023 ஆம் ஆண்டு தமிழீழத் தேடியக்கொடி நாளை முன்னிட்டு அவர் வெளியிட்ட செய்தியில் மேலும் தெரிவிக்கையில், உலகில் புதிய அரசுகள் உலகளாவிய ரீதியிலும், பிராந்திய ரீதியிலும் அமைந்திருக்கும் வலுவுள்ள அரசுகளின் நலன்களின் அடிப்படையிலும், அரசுக்காக போராடும் தேசிய இனங்களின் பலத்தின் அடிப்படையிலுமே உருவாக்கப்படுகின்றன.

 அத்துடன் ஈழத்தமிழ் மக்களின் தாயகம் இந்து சமுத்திரத்தின் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருக்கின்றது, ஈழத்தாயகத்திற்கு அருகில் 7 கோடிக்கும் மேற்பட்ட தமிழ்மக்களின் தாயகமான தமிழ் நாடு அமைந்திருக்கின்றது, வலுவான புலம்பெயர்ந்த (diaspora) ஈழத்தமிழர்கள் உலகெங்கும் பரந்துள்ளனர், உலகின் பல பாகங்களில் வாழும் தமிழ்மக்கள் ஈழத்தமிழ் மக்களுக்கு உறவுகளாக உள்ளனர்.

images/content-image/2023/11/1700644764.jpg

 வளமுள்ள வலுவான நாடுகடந்த தேசமாக அமைந்திருக்கும் தமிழீழ தேசம், சுயநிர்ணய அடிப்படையிலும், மீண்ட இறைமையின் அடிப்படையிலும், ஈடுசெய் நீதியின் அடிப்படையிலும், தமக்கென ஒரு நாடு அமைக்க உரித்துடையவர்கள், வரலாற்றுப் பெருநகர்வில் தமிழீழ தேசத்திற்கான கதவுகள் திறக்கும் வாய்ப்புகள் உள்ளது, இவ் விடயத்தில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும், தமிழ் நாடும் சுதந்திரமான பங்கை ஆற்ற முடியும்.

 நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேசியக் கொடி நாள் பிரகடனத்தில், தமிழீழத் தேசியக் கொடி, தமிழீழத்தின் இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் குறிக்கின்றது. இக்கொடி உலகம் முழுவதிலும் உள்ள தமிழீழ தேசத்தைச் சேர்ந்த அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

 மேலும் இப் பிரகடனத்தில் தமிழீழத்தேசியக் கொடி, தமிழீழ தேசம் அந்நிய ஆட்சியிலிருந்தும், சிங்கள பௌத்த மேலாதிக்கத்திலிருந்தும் விடுதலை பெறுவதற்கும் தமிழீழ தேசம் செய்த அளவிட முடியாத உன்னத தியாகத்தை நினைவூட்டுகிறது.

 இறுதியாக நாம் நமக்கென்ற அரசை அமைக்கும் போதுதான் நமது தேசியக் கொடிக்கு அனைத்துலக அங்கீகாரம் கிடைக்கும், அப்போதுதான் அனைத்துலக அரங்கில் நம் தேசியக்கொடி பட்டொளி பறப்பதற்கான நாள் வரும் எனவும் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!