ஆட்சியாளர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கை ஒத்துழைப்புக்கோரும் ரணில்!
#SriLanka
#Parliament
#Ranil wickremesinghe
#Srilanka Cricket
PriyaRam
2 years ago
ஆட்சியாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கும் சூழலை தானே ஏற்படுத்தியதாகவும் ஆகவே தனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.
கிரிக்கெட் விவகாரம் தொடர்பாக இரண்டு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலே பிரச்சினை தீவிரமடைய காரணம் எனவும் கூறியுள்ளார்.

சட்டத்தின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படும் என்றும், ஷம்மி சில்வாவை பாதுகாக்க வேண்டிய தேவை தனக்கு இல்லை என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புரிமை என கூறிக்கொண்டு நீதிபதிகளின் தீர்ப்புக்களை விமர்சிக்கக் கூடாது என்றும் அவர்களை சுயாதீனமாக செயற்பட அனுமதிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டே மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.