நாடாளுமன்ற விசேட உரையில் ரணில் வழங்கிய வாக்குறுதி!

#SriLanka #Election #Parliament #Ranil wickremesinghe
PriyaRam
2 years ago
நாடாளுமன்ற விசேட உரையில் ரணில் வழங்கிய வாக்குறுதி!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

"வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி, எதிராக வாக்களித்தவர்களுக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/11/1700639501.png

"அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல் இரண்டையும் நடத்துவேன். அதன் பிறகு ஏனைய தேர்தல்களை நடத்துவேன்" எனவும் உறுதியளித்துள்ளார்.

"எக்காரணம் கொண்டும் தேர்தல்கள் பிற்போடப்பட மாட்டாது" எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!