உடன் நடைமுறையாகும் வகையில் விதிக்கப்பட்டுள்ள தடை!
#SriLanka
#government
PriyaRam
2 years ago
இலங்கை புகையிலை நிறுவனத்தினால் (CTC) விநியோகிக்கப்படும் மூன்று வகையான சுவையுள்ள சிகரெட்களின் விற்பனை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, Dunhill Switch , Dunhill Double Capsule மற்றும் John Player Gold Pro Cool ஆகிய சிகரெட் விற்பனை நவம்பர் 17 ஆம் திகதி முதல் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த சிகரெட் வகைகளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறும், கடைகளில் இந்த சிகரெட்களை காட்சிப்படுத்தினால் அவற்றை அகற்றுமாறும் இலங்கை புகையிலை நிறுவனம் சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.