பணயக் கைதிகளை விடுவித்து திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்த இஸ்ரேல்!

#world_news #Israel #War #Gaza
Mayoorikka
1 year ago
பணயக் கைதிகளை விடுவித்து திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்த இஸ்ரேல்!

ஹமாஸ் - இஸ்ரேல் இடையே 46 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இதனால் காசாவில் உள்ள பொதுமக்கள் மனிதாபிமான உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். 

அவர்களுக்கு உதவி கிடைக்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டன. குறிப்பாக அமெரிக்கா உதவியுடன் கத்தார் போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய மத்தியஸ்தராக செயல்பட்டு வந்தது.

 கத்தார் இருதரப்பிலும் பிணைக்கைதிகள்- இஸ்ரேல் சிறையில் உள்ள பலஸ்தீனர்கள் விடுதலை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால் ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் பிடித்து வைத்துள்ள 240 பிணைக்கைதிகளில் 50 பேரை விடுதலை செய்ய சம்மதம் தெரிவித்துள்ளனர்.

 இதனால் இஸ்ரேல் மந்திரிசபை நான்கு நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், ஒவ்வொரு 10 பிணைக்கைதிகளை விடுவிக்க கூடுதலாக ஒருநாள் போர் நிறுத்தம் என்ற வகையில் போர் நிறுத்த நாட்களை அதிகரிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

 50 பிணைக்கைதிகள் விடுவிக்கப்படும் அதே வேளையில், இஸ்ரேல் சிறையில் இருந்து 150 பலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!