முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் விவகாரம் - சட்டத்தரணி சங்கம் விடுத்துள்ள அறிப்பு!

#SriLanka #Mullaitivu
PriyaRam
2 years ago
முல்லைத்தீவு நீதிபதி பதவி விலகல் விவகாரம் - சட்டத்தரணி சங்கம் விடுத்துள்ள அறிப்பு!

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பிலான விசாரணை அறிக்கையின் பிரதி மற்றும் அதற்கான காரணம் தொடர்பான தகவலை பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் வழங்குவார் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தமக்கு தெரியவந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

அறிக்கை சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் தொகுக்கப்பட்டுள்ள நிலையில் அதன் நகலை சமர்ப்பிக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சரை கோரியுள்ளதாகவும் இந்த வாரத்தில் அது கிடைத்ததும் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

images/content-image/2023/11/1700628219.jpg

உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் மிகுந்த மன அழுத்தம் காரணமாக தான் வகித்து வந்த பதவிகளை இராஜினாமா செய்வதாக சரவணராஜா 2023 செப்டம்பரில் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

முல்லைத்தீவு குறுந்தூர்மலை விகாரை தொடர்பான வழக்கு தொடர்பாக அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் பதவியை இராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.

இந்நிலையில் அவரது பதவி விலகலை தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த விடயம் தொடர்பில் உடனடி விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் எக்கநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!