மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு!

#SriLanka #Jaffna #Tamil People
Mayoorikka
2 years ago
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு யாழ்ப்பாணத்தில் திறந்து வைப்பு!

மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள், மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது.

 ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் செவ்வாய்க்கிழமை (21) ஆரம்பமாகியுள்ளது.

images/content-image/2023/11/1700623039.jpg

 இதனையொட்டி யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு இன்று மாலை 6 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

images/content-image/2023/11/1700623052.jpg

 இதன்பொழுது பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் தாயாரான சிவபாதம் இந்திரவதி ஏற்றிவைத்து மலரஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் யாழ் மாநகர முன்னாள் முதல்வரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் மலரஞ்சலி செலுத்தினர்.

images/content-image/2023/11/1700623068.jpg

 தொடர்ச்சியாக சிறுவர் சிறுமியர்களால் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்லறை திரைநீக்கம் செய்யபட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

images/content-image/2023/11/1700623083.jpg

 1982 கார்த்திகை 27 முதல் 2009 வைகாசி 18 வரையான காலப்பகுதியில் தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகியவர்களில் கிடைக்கபெற முடிந்த 24,379 வீரர்களின் பெயர்களினை உள்ளடக்கிய கல்லறைகளையும் சில தகவல்களையும் உள்ளடக்கி நினைவாலயம் உருவாக்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/11/1700623102.jpg

 மாவீரர்களின் பெற்றோர், முன்னாள் போராளிகள், சிறுவர்கள், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

images/content-image/2023/11/1700623121.jpg

images/content-image/2023/11/1700623176.jpg

images/content-image/2023/11/1700623205.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!