சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம் : வர்த்தமானி வெளியீடு!

#SriLanka #sugar #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம் : வர்த்தமானி வெளியீடு!

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.  அது தொடர்பான புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னைய வர்த்தமானி அறிவித்தலின் படி, பொதி செய்யப்படாத ஒரு கிலோ வெள்ளை சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலையாக 275 ரூபாயும், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ சீனிக்கு 295 ரூபாயும் நிர்ணயம் செய்து கடந்த 3ம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.  

மேலும், பேக் செய்யப்படாத ஒரு கிலோ பிரவுன் சக்கரை 330 ரூபாவாகவும், பேக் செய்யப்பட்ட பிரவுன் சர்க்கரை 350 ரூபாவாகவும்,  அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

 இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அந்த விலைகள் நீக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!