இன்னும் சில தினங்களில் O/L பரீட்சை முடிவுகள் வெளியாகவுள்ளன!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (21.11) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், "இப்போது பிள்ளைகளுக்கு வயதாகி, பரீட்சைகள் தாமதமாகின்றன. 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாதத்தில் வழங்கினோம். வரலாற்றில் ஒரு மாதத்திற்குள் பெறுபேறுகளை வழங்கியதில்லை."
“சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சில தினங்களில் வழங்கப்படும். உயர்தரப் பரீட்சை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விடைத்தாள்களை குறிப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் பெறுபேறுகள் மூன்று மாதங்கள் தாமதமானது” எனத் தெரிவித்துள்ளார்.