இலங்கை கிரிக்கெட் சபை இடைநீக்கம் தொடர்பில் ஐசிசியின் அறிவிப்பு!

#SriLanka #Srilanka Cricket #ICC
PriyaRam
2 years ago
இலங்கை கிரிக்கெட் சபை இடைநீக்கம் தொடர்பில் ஐசிசியின் அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட் பேரவை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண தொடரை இலங்கையில் இருந்து தென்னாபிரிக்காவிற்கு மாற்றியுள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை தென்னாபிரிக்காவில் நடத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நிர்வாக நிச்சயமற்ற தன்மையை கருத்தில் கொண்டு ஐசிசி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆலோசனைக்குப் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

images/content-image/2023/11/1700566789.jpg

இலங்கை கிரிக்கெட் சபை இடைநிறுத்தப்பட்டாலும் இலங்கை அணி தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியும் என சர்வதேச கிரிக்கட் பேரவை ஏகமனதாக முடிவு செய்துள்ளது.

இதேநேரம் கிரிக்கெட் விளையாட்டை தொடர அனுமதிக்குமாறு தான் ஐசிசியிடம் கோரியுள்ள நிலையில் அந்த கோரிக்கையை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர் என ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஜனவரி 14 முதல் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!