பொருளாதார குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கிறோம் : மகிந்த ராஜபக்ஷ!
பொருளாதாரம் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ “அன்புள்ள பிரதி சபாநாயகர் அவர்களே, இந்த சபையில் பொருளாதாரம் தொடர்பான பல குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம். அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றோம்.
தற்போது ஒவ்வொருவருடைய உரிமைகளையும் பறிப்பதாகப் பேசுபவர்கள் அந்தக் காலத்தில் என்ன செய்தார்கள் என்பது எங்களுக்கு நினைவிருக்கிறது.
ஆனால் ஒரு குற்றச்சாட்டை எழுப்பியதால் மீண்டும் சேற்றை வீச வேண்டுமா?, சேற்றை வீசுபவர்கள் கையில் சேறு விழும் என்று சொல்ல வேண்டும். ஒருவரின் உரிமையை பறிக்க வேண்டும் என்று பேசுபவர்கள் குறைந்தபட்சம் அவர்களின் உரிமைகளையாவது உறுதி செய்ய பாடுபட வேண்டும். நாட்டு மக்களே! புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.