மன்னார் மாவட்டத்தின் முதல் நீதிபதியாக அரியரட்ணம் வில்பிரட் அர்ஜுன் நியமனம்!
#SriLanka
#Mannar
#Judge
Mayoorikka
2 years ago
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 7 வருடங்களாக சிறப்பாக சேவையாற்றிய சட்டத்தரணி அரியரட்ணம் வில்பிரட் அர்ஜுன் வருகின்ற 01-12-2023 தொடக்கம் இலங்கையின் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நீதிபதியாக நியமிக்கப் படவுள்ளார்.
மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் தனது பாடசாலை கல்வியை பெற்றுக்கொண்ட அர்ஜுன் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றில் முதலாவது இளம் வயதில் நீதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நீதிபதிகளை உள்வாங்குவதற்கு என இடம் பெற்ற போட்டி பரீட்சையில் தேசிய ரீதியாக சித்தியடைந்ததுடன் 14 வது நிலையையும் பெற்றுக்கொண்டார்.

நாடளாவிய ரீதியில் டிசம்பர் மாதம் 1 திகதி 25 பேர் நீதிபதிகளாக கடமைகளை பொறுப்பேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.