வட்டுக்கோட்டை பொலிஸாரின் அராஜகத்தால் உயிரிழந்த இளைஞன் - மீண்டும் பொலிஸார் அச்சுறுத்தல்!

#SriLanka #Jaffna #Police #Attack #Threat
PriyaRam
2 years ago
வட்டுக்கோட்டை பொலிஸாரின் அராஜகத்தால் உயிரிழந்த இளைஞன் - மீண்டும் பொலிஸார் அச்சுறுத்தல்!

யாழ்- வட்டுக்கோட்டையில் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளான இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பொலிஸார் தாக்கியதால் இளைஞன் உயிரிழக்கவில்லை எனத் தெரிவித்து கடிதமொன்றைத் தருமாறு, இளைஞனின் உறவினர்களிடம் பொலிஸார் மிரட்டியுள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் நிலவரங்களை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வட்டுக்கோட்டையில் காட்டுமிராண்டித்தனமான கொலை ஒன்று அரங்கேறியிருப்பதை என்னால் உணர முடிகிறது. உயிரிழந்த இளைஞனையும் அவரது நண்பரையும் பொலிஸார் காரணமில்லாமல் கைது செய்து சட்டத்திற்கு முரணாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

images/content-image/2023/11/1700561858.jpg

அவர்களுக்கு உரிய முறையில் வைத்திய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. பின்னர் இந்த விடயங்களை வெளியே சொல்ல வேண்டாம் என அச்சுறுத்தி உள்ளார்கள். 

அது மாத்திரமில்லாமல் அந்த அச்சுறுத்தலின் விளைவாக தற்போது இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது. 

அவரோடு கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞரும் சிறைச்சாலையில் இருக்கின்றார். அவருக்கும் காயங்கள் காணப்படுகிறது. 

அவரது குடும்பத்திடம் சென்று பொலிஸார் தாங்கள் அவரை தாக்கவில்லை என கடிதம் தருமாறு அச்சுறுத்தியுள்ளனர். 

இந்த விடயங்களை நாங்கள் நாளைய தினம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவர இருக்கின்றோம். 

இவ்விடயத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுகின்றது. இங்கே குற்றம் இழைத்ததும் பொலிஸார், அக்குற்றத்தை விசாரிக்க போவதும் பொலிஸார். 

ஊடகங்கள் இந்த வழக்கிற்கு முழுமையான ஆதரவை தர வேண்டும். அல்லது இந்த வழக்கின் உண்மைகள் குழி தோண்டிப் புதைக்கப்படலாம்” என  கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!