கிளிநொச்சியில் மாவீரர் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு!
#SriLanka
#Kilinochchi
Mayoorikka
2 years ago
மாவீரர் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினமும் கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சி கிருஸ்ணபுரம், விநாயகபுரம், அம்பாள்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில், மாவீரர்களின் நினைவு படத்திற்கு விளக்கேற்றி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலர்தூவி அஞ்சலிக்கப்பட்டது. தொடர்ந்து மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அஞ்சலியுரை நிகழ்த்தினார்.


