விஷம் அருந்தி விட்டு பாடசாலைக்கு சென்ற மாணவி!
#SriLanka
#School Student
PriyaRam
2 years ago
நச்சுத் திரவத்தை அருந்தி பாடசாலைக்கு பிரவேசித்த ஹட்டன் வலய கல்வி காரியாலயத்தின் கீழ் இயங்கும் பிரதான பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாடசாலையின் ஆசிரியர்கள் சிலர் தம்மையும் தமது சகோதரியையும் தொடர்ந்தும் தூற்றுவதன் காரணமாக நச்சுத் திரவத்தை அருந்தி பாடசாலைக்கு பிரவேசித்ததாக குறித்த மாணவி வைத்தியர்களிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து, வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவி மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.