ஹமாஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள பரபரப்பு அறிவிப்பு!

#War #Hamas #Gaza
PriyaRam
2 years ago
ஹமாஸ் ஜனாதிபதி வெளியிட்டுள்ள பரபரப்பு அறிவிப்பு!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே யுத்தம் தொடர்ந்து வரும் நிலையில், இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட உள்ளதாகப் பரபரப்பு தகவல் ஒன்றை ஹமாஸ் ஜனாதிபதி இஸ்மாயில் ஹனியே வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில், ஹமாஸ் ஜனாதிபதி இஸ்மாயில் ஹனியே கூறியுள்ள இந்தக் கருத்துகள் மிகவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

அதாவது, இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஐந்து நாட்கள் போர் நிறுத்தம் ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

images/content-image/2023/11/1700552672.jpg

காஸா பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு இஸ்ரேல் தாக்குதல் நடத்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பதிலாக 50 மற்றும் 100 என இரு பேட்ச்களாக பணயக் கைதிகளை விடுவிப்பார்கள். அதில் இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள்.

அதேநேரம் இராணுவ வீரர் யாரையும் விடுவிக்க முடியாது என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்ட நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 240 பேரை ஹமாஸ் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!