வட்டுக்கோட்டை விவகாரம்: இரண்டாவது சந்தேக நபர் பிணையில் விடுதலை

#SriLanka #Jaffna #Arrest #Court Order #Court
Mayoorikka
2 years ago
வட்டுக்கோட்டை விவகாரம்: இரண்டாவது சந்தேக நபர் பிணையில் விடுதலை

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் திருட்டுச் சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

 விளக்கமறியலில் வைக்கப்பட்ட கைதி உயிரிழந்த நிலையில் குறித்த வழக்கு இன்றையதினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

 இதன்போது யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்த உயிரிழந்தவருடன் கைதாகி தடுத்து வைக்கப்பட்டவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

images/content-image/2023/11/1700552141.jpg

 குறித்த வழக்கை வட்டுக்கோட்டைப் பொலீசாரிடமிருந்து மாற்றப்பட்ட வேண்டும் என்ற சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 குறித்த வழக்கில் சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட பலரும் ஆஜராகியிருந்தனர்.

 திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளானமை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!