வெலிமடை உள்ளுராட்சி சபையின் முன்னாள் தலைவர் கைது

#SriLanka #Arrest #Police #Parliament #government #Minister #municipal council #Member
Prasu
2 years ago
வெலிமடை உள்ளுராட்சி சபையின் முன்னாள் தலைவர் கைது

வெலிமடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெப்பட்டிபொல பிரதேசத்தில் கடமையில் இருந்த இரு போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களை கடமையாற்றவிடாமல் இடையூறு விளைவித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் வெலிமடை உள்ளுராட்சி சபையின் முன்னாள் தலைவர் ஒருவர் வெலிமடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் நேற்று (20) வெலிமடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கெப்பட்டிபொல பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய வெலிமடை உள்ளுராட்சி சபையின் முன்னாள் தலைராவார்.

 சந்தேக நபர் வெலிமடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!