யாழில் அதிகரித்துள்ளது பிக்மீ மற்றும் ஊபர் சேவை சாரதிகள் மீதான தாக்குதல்கள்!

#SriLanka #Jaffna #Police #Investigation #Attack #Uber
PriyaRam
2 years ago
யாழில் அதிகரித்துள்ளது பிக்மீ மற்றும் ஊபர் சேவை சாரதிகள் மீதான தாக்குதல்கள்!

யாழில் பிக்மீ மற்றும் ஊபர் சேவையைப் பயன்படுத்தும் முச்சக்கரவண்டிச் சாரதிகள் மீது இடம்பெற்று வரும் தாக்குதல் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

யாழில் தரிப்பிட முச்சக்கர வண்டிச் சாரதிகள், அதிகளவில் கண்டனம் அறவிடுவதாக பொது மக்கள் குற்றம் சுமத்திவந்த நிலையில், அண்மையில் பொது மக்கள் நலன் கருதி அங்கு பிக்மீ, ஊபர் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் குறித்த சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அதிகளவான மக்கள் குறித்த சேவையைப் பயன்படுத்திவருவதாகவும், இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தரிப்பிட முச்சக்கரவண்டிச்சாரதிகள் கவலைதெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் இதன் விளைவாக அண்மைக்காலமாக பிக்மீ மற்றும் ஊபர் சாரதிகள் தரிப்பிட சாரதிகளால் தாக்கப்பட்டு வரும் சம்பவங்களும் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

images/content-image/2023/11/1700548555.jpg

இந்நிலையில் கடந்த கடந்த வெள்ளிக்கிழமையும் பிக்மீ சாரதி ஒருவர் தரிப்பிட சாரதிகளால் தாக்கப்பட்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் திருநெல்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இது குறித்து பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போதும் பொலிஸாரும், தனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் நடந்ததாக குறித்த சாரதி கவலை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது குறித்து பிக்மீ நிறுவனத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து குறித்த நிறுவனம் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய முறைப்பாட்டினை அடுத்து, சாரதி நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு முறைப்பாடு பெறப்பட்டது.

இதனடிப்படையில் யாழ் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!