தமிழ்தேசிய கொடிதினம் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வெளிப்படுத்தி நிற்கின்றது! பிரம்டன் மேயர்

#SriLanka #Canada #Canada Tamil News
Mayoorikka
2 years ago
தமிழ்தேசிய கொடிதினம் தமிழர்களின்  சுயநிர்ணய உரிமையை வெளிப்படுத்தி நிற்கின்றது! பிரம்டன் மேயர்

தமிழ்தேசிய கொடிதினம் மரணிக்காத தமிழர்களின் உணர்வு சுயநிர்ணய உரிமை சுதந்திரம் ஆகியவற்றிற்கான போராட்டம் ஆகியவற்றை வெளிப்படுத்தி நிற்கின்றது என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.

 தமிழ்தேசிய கொடி தினத்தை குறிக்கும் விதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 தமிழ்தேசிய கொடி தினம் சுதந்திரம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றிற்கான தொடரும் போராட்டம் பாரம்பரியம் மீளுந்தன்மை போன்றவற்றிற்கான குறியீடாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

 33வருடாந்த தமிழ் தேசிய கொடி நாள் 2023 21 ம் திகதி சர்வதேசரீதியில் கடைப்பிடிக்கப்படுகின்றது தமிழர்களின் சின்னமான கொடியின் முக்கியத்துவம் கொண்டாடப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 இலங்கையிலும் உலகளாவியரீதியிலும் தமிழர்களின் வரலாறு கலாச்சாரம் நிரந்தரமான உணர்வுகள் என்பவற்றை கௌரவிப்பதற்கான புனிதமான தினத்தை இந்த நாள் குறிக்கின்றது பட்ரிக் பிரவுண் குறிப்பிட்டுள்ளார்.

 நீதி மனித உரிமைகள் சுதந்திரத்திற்காக முன்னோர்களின் அளப்பரிய தியாகத்தினை நினைவுபடுத்தும் நாளாகவும் தமிழ் கொடி நாள் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார் கனடா தமிழர்கள் தாங்கள் தத்தெடுத்த நாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளனர் சமூகங்களை வளப்படுத்தியுள்ளனர் எதிர்கால சமூகத்தினை பொறுப்புணர்வுள்ள சமூகமாக வாழ்வதற்கு வழிகாட்டியுள்ளனர்என அவர் தெரிவித்துள்ளார்.

 சர்வதேச அளவில் சட்ட கட்டமைப்புகளிற்குள் தமிழ் தேசிய கொடிநாளை கொண்டாடுவது அனைவரையும் உள்வாங்குவது பல்வேறுபட்ட கலாச்சார அடையாளங்களை அங்கீகரிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இந்த தருணம் சுதேசிய மக்களின் உரிமைகளை அங்கீகரித்தல் மனித உரிமைகளிற்காக பரப்புரை செய்தல் இனஐக்கியத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை குறிக்கும் விதத்தில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 அதேவேளை தேசிய கொடிகளிற்கு அருகில் ஏற்றப்படும் தமிழ்தேசிய கொடி ஐக்கியம் சர்வதேச அளவில் மரணிக்காத தமிழ் மக்களின் உணர்வு என்பவற்றை வெளிப்படுத்துகின்றது எனவும் பட்ரிக் பிரவுண் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!