வரவு செலவு திட்டம் தொடர்பில் எதிரணியின் தீர்மானம்!
#SriLanka
#Parliament
#budget
PriyaRam
2 years ago
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
அத்துடன் வரவு செலவுத் திட்டத்தின் 3 ஆம் வாசிப்பு மீதான விவாதம் நாளை முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி இன்று வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.