துவாராகா தொடர்பில் வெளியாகவுள்ள காணொளி - பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

#SriLanka #Social Media # Ministry of Defense
PriyaRam
2 years ago
துவாராகா தொடர்பில் வெளியாகவுள்ள காணொளி - பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா இன்னும் உயிருடன் இருப்பதைக் குறிக்கும் காணொளி தயாரிப்பு தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் இருப்பினும் சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருவதாகவும் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

துவாரகா இன்னும் உயிருடன் இருப்பதைக் குறிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவில் உருவாக்கப்பட்ட வீடியோ நவம்பர் 27 ஆம் திகதி வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

images/content-image/2023/11/1700540816.jpg

இந்நிலையிலேயே பாதுகாப்பு அமைச்சு இவ்வாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அத்துடன், புலிகளின் மற்றொரு மலிவான முயற்சி என்பதனால் அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை எனவும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த விடயம் தொடர்பாக தேவைப்பட்டால், அதற்கேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!