இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #ICC
Thamilini
2 years ago
இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை  தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளது!

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை தொடர்பில் இன்று (21.11) தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.  

இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளது.  

சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ள கூட்டத்தில் இது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்பட்டால், விதிக்கப்படும் நிபந்தனைகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்படும். அத்துடன், அடுத்த வருடம் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது. 

இக்கலந்துரையாடலில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர்  ஷம்மி சில்வாவும் இலங்கை கிரிக்கெட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் பார்வையாளர் மட்ட பிரதிநிதியாக கலந்துகொள்ளவுள்ளனர். 

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் இலங்கை கிரிக்கட் மீது விதிக்கப்பட்ட கிரிக்கெட் தடை காரணமாக, இலங்கை கிரிக்கெட் தலைவரால் சுறுசுறுப்பான மட்டத்தில் இந்த சந்திப்பில் பங்கேற்க முடியவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!