பிரதமரை சந்தித்த சீனாவின் விசேட தூதுக் குழுவினர்!
#SriLanka
#Sri Lanka President
#PrimeMinister
#China
Mayoorikka
2 years ago
இலங்கையின் தற்போதைய பொருளாதாரம், அரசியல் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஷென் யிகின் உள்ளிட்ட தூதுக்குழுவினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் விசேட பிரதிநிதி ஷென் யிகின் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்று அலரி மாளிகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடினர்.

இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுத்திருந்த சந்தர்ப்பத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க சீனா வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்காலத்திலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீனா உதவும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.