நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பில் புதிய சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பில் புதிய சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக புதிய சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி  விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியின் கெளரவத்தைப் பாதுகாக்காவிடின், அந்த உறுப்பினரின் உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கு சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

கண்டி பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை,  குறித்து நாட்டு மக்களிடம் பல விமர்சனங்கள் உள்ளன.

இது நியாயமான விமர்சனம்.கடந்த காலத்தில் அந்த பொறுப்பை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறைவேற்றாததால் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். பாராளுமன்ற தராதர சட்டமூலம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது பதவியின் கௌரவத்தை காக்காத வகையில் செயற்பட்டால் அவர் சட்டத்திற்கு புறம்பாக ஏதாவது செய்திருந்தால் சுயேச்சையாக நியமிக்கப்பட்ட குழு அந்த உறுப்பினரை தண்டிக்க வேண்டும்.

குறிப்பாக அதில் சட்டமூலங்களை சேர்த்துள்ளோம். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டது”எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!