நாட்டை வழிநடத்தும் அரசியல் அமைப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இல்லை : அநுர குமார!
நாட்டை வழிநடத்தும் அரசியல் அமைப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியிடம் உள்ள ஒரே நபர் சாகல ரத்நாயக்க எனவும், இதன்படி ஜனாதிபதியால் நியமிக்கப்படும் எந்தவொரு குழுவின் தலைவர் பதவி அல்லது அதியுயர் பதவிக்கு சாகல ரத்நாயக்கவே உரித்துடையவர் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் அவர்கள் விரும்பியவாறு அரசை நடத்துவதற்கான அரசியல் அமைப்பு இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதிக்கு தனது வேலைத்திட்டத்தை சிறப்பாகவோ அல்லது மோசமாகவோ அமுல்படுத்துவதற்கு அரச அதிகாரம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.