மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வு!

தமிழ் கடவுளான முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப் படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும்.  

இந்த விரதம் கடந்த ஆறு நாட்களாக நடைபெற்று வந்த நிலையில்,  இறுதி நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வுகள் நேற்றைய (19.11) தினம் மாலை மன்னார் மாவட்டத்தில் உள்ள பல இந்து ஆலயங்களில் சிறப்புற நடைபெற்றது. 

images/content-image/1700362390.jpg

சரவணப் பொய்கையில் ஆறு முகங்களுடன் அவதரித்த முருகனை நோக்கி ஆறு தினங்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும். முருகப் பெருமான் மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்ற ஆலயங்களில் சூரன் போர் இடம்பெற்றது.  

மன்னாரில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் பக்தர்கள் புடைசூழ சூரசம்ஹார நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.

images/content-image/1700362407.jpg

திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணானந்த குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். 

images/content-image/1700362424.jpg

images/content-image/1700362443.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!