மாரவில பகுதியில் கடலுக்கு சென்ற ஜப்பானிய பிரஜை உள்பட நால்வர் மாயம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
மாரவில பகுதியில் கடலுக்கு சென்ற ஜப்பானிய பிரஜை உள்பட நால்வர் மாயம்!

மாரவில, சீ கட்டுவ பிரதேசத்தில் கடலுக்குச் சென்ற படகு கவிழ்ந்ததில் ஜப்பானிய பிரஜை உட்பட நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

காணாமல் போன படகின் உரிமையாளரான மாரவில - வடக்கு மூடுகடுவ பகுதியைச் சேர்ந்த ஸ்ரீயானி ஜீவனி பெர்னாண்டோ இன்று (19.11) அதிகாலை 03.30 மணியளவில் மாரவில பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். 

கடந்த 18ஆம் திகதி மாலை 05.30 மணியளவில் ஜப்பானியர் உட்பட 05 பேர் மீன்பிடிப்பதற்காக சிறிய டிங்கி படகில் கடலுக்குச்  சென்றுள்ளனர். 

மீன்பிடிக்கும்போது மழை பெய்ததால் படகு கடலில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது படகில் பயணித்த ஒருவர் கரையில் இருந்த மீனவர் ஒருவருக்கு தொலைப்பேசி மூலம் குறித்த தகவலை அறிவித்துள்ளார். 

இந்நிலையில்,  படகு கவிழ்ந்ததாக கூறப்படும் பகுதிக்கு சென்ற மற்றொரு குழுவினர் படகு ஓட்டி வந்தவரை  மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 

படகில் இருந்த ஏனைய நான்கு பேரும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். கடற்படையினரின் உதவியுடன் காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!