அண்டார்டிகா பனி ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கி உலக சாதனை!

#Flight #world_news
PriyaRam
1 year ago
அண்டார்டிகா பனி ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்கி உலக சாதனை!

அண்டார்டிகா பகுதியில் பயணிகள் விமானமொன்று தரையிறங்கி உலக சாதனை படைத்துள்ளது. 

நோர்வே நாட்டிலிருந்து நோர்வே போலார் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் உட்பட்ட 45 விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வுக்கு தேவையான பொருட்கள், மருந்துப் பொருட்கள், உணவு என 12 டன் எடையுள்ள பொருட்களுடன் விமானம் தரையிறங்கியுள்ளது.

நீல பனி ஓடுபாதையானது கிட்டத்தட்ட 3 கிலோ மீற்றர் நீளம் மற்றும் 200 அடி அகலம் கொண்டது. 

images/content-image/2023/11/1700304506.jpg

இது வழக்கமான ஓடுபாதை போன்றிருந்தாலும், பனிக்கட்டி என்பதால் விமானத்தை தரையிறக்குவது சவாலானது. 

இவ்வாறான நிலையில், நோர்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை கடந்த 15ம் திகதி அண்டார்டிகாவின் குயின் மவுட் லேண்ட் எனும் இடத்தில் விமானிகள் தரையிறக்கி சாதனை படைத்துள்ளனர். 

குறித்த விமானம் கட்டுப்பாட்டை இழந்தால் சறுக்கிக்கொண்டு பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகும் சூழ்நிலைக்கு மத்தியில், விமானத்தை தரையிறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!