எண்பதுகளில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் கதாநாயகன் ஆனந்தராஜா மாஸ்டர்!

#SriLanka #School #Kilinochchi
Mayoorikka
2 years ago
எண்பதுகளில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் கதாநாயகன் ஆனந்தராஜா மாஸ்டர்!

புத்திஜீவிகள் உட்பட பல தேசப்பற்றாளர்கள் அரசியல் காரணங்களுக்காக படுகொலை செய்யப்பட்டது என்பது எமது போராட்ட வரலாற்றில் வேதனைக்குரிய விடயம் மட்டுமல்ல வெட்கத்துக்குரிய விடயமும் கூட.

 ஆனந்தராஜா மாஸ்டர் (ஆசிரியர்) 80 எண்பதுகளில் அன்றைய கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் கதாநாயகன். இன்னும் சொல்லப் போனால் காவல் நாயகன். 

images/content-image/2023/11/1700299703.jpg

பொதுவாக ஆசிரியர்கள் என்பவர்கள் அனைவருடைய வாழ்க்கையிலும் வாழ்நாளின் இறுதிவரையிலும் நினைவு கூறப்படுபவர்கள். அந்த வரிசையில் ஆனந்தராஜா ஆசிரியரும் எனது வாழ்நாளில் நினைவு கூறக்கூடிய ஒரு ஆசிரியர். 

images/content-image/2023/11/1700299722.jpg

கிளிநொச்சி மத்திய கல்லூரியில் ஆங்கில ஆசிரியராகவும் ஒழுங்காற்று நடவடிக்கைக்கான ஆசிரியராகவும் தனது பணியை எண்பதுகளில் மிகச் சிறப்பாக செய்தவர்களில் இவரும் ஒருவர். மிகவும் கண்டிப்புடையவர் .அதே நேரத்தில் தன்னிடம் படிக்கின்ற மாணவர்கள் நாளை இந்த சமூகத்தில் ஒரு நல்ல பெயரை வாங்க வேண்டும் என்கின்ற நல்ல உயர்ந்த சிந்தனை உள்ள ஒரு மனிதனாகவும், ஆசிரியராகவும் எனது கண்ணில் பட்டார். மாணவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார். 

images/content-image/2023/11/1700299740.jpg

அவர் அடித்தார் என்றால் யாரும் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்க போனாலும் அவர்களோடும் முரண்படுவார். இதில் முக்கியமாக பாடசாலை நேரத்தில் மட்டும் மாணவர்கள் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைக்காமல், பாடசாலைக்கு வெளியேயும் ஒழுக்கத்தோடு இருக்க வேண்டும் என்று கருதுபவர். 

images/content-image/2023/11/1700299766.jpg

பொதுவாக வர்ண கோடிட்ட உள்ளாடை அணிவது, வீதிகளில் பாலங்களில் நின்று போகிற வருகிறவர்களை கிண்டல் செய்வது, அப்படிப்பட்டவர்களுடன் சேர்ந்து செல்வது போன்ற பல விடயங்களை அவதானிப்பார், எச்சரிப்பார், கல்வி என்று வரும் பொழுது நாளை படிக்க இருக்கின்ற பாடத்தில் வருகின்ற சொற்களை பாடமாக்க சொல்லி சொல்வார்.

images/content-image/2023/1700299781.jpg

 அதில் சொல்வதெழுதல் என்று சொல்லி 10 முதல் 15 சொற்களை தெரிவு செய்து அர்த்தங்களை தெரிந்து பாடமாக்க சொல்லிச் சொல்வார். இதிலே அவர் உதாரணமாக 10 சொற்கள் என்று சொல்வோமே ஆனால் ஐந்து சொற்களுக்கு கீழ் சரி எடுத்தவர்களை எழும்ப சொல்வார். 

 அதிலே ஒன்று அல்லது இரண்டு சொற்கள் மட்டும் சரியாக எடுத்தவர்களுக்கு மிகக் கடுமையாக அடிப்பார். இரண்டு சொற்கள் கூட உன்னால் படிக்க பாடமாக்க முடியவில்லை என்றால் ஏன் பாடசாலைக்கு வருகிறாய் என்று கேட்பார். அவர் ஒரு நாளும் எதிர்பார்க்கவில்லை, ஒரு பிள்ளை 10 சொற்களும் சரி எடுக்க வேண்டும் என்று. அதே நேரத்தில் முக்கியமான ஒரு கருத்தை சொல்லுவார். 

images/content-image/2023/1700299801.jpg

நான் உனக்கு ஏன் அடிக்கிறேன் என்றால் என் பிள்ளையை நான் எப்படி அடித்து படிப்பிப்பேனோ அதேபோல்தான் நான் உன்னையும் நினைக்கின்றேன். நீ சமூகத்தில் நாளை எங்கு கற்றாய் ? யாரிடம் கற்றாய்? எப்படி கற்றாய்? என்று கேட்டால் எனக்கும் இந்தப் பாடசாலைக்கு பெருமை கிடைக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் சேர்த்து அப்ப பெருமைகள் முழுவதும் உன்னையே சேர வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லுவார். இந்த அணுகுமுறை என்னைப் பொறுத்தவரையில் நினைவு கூறக்கூடியதும், போற்றப்பட வேண்டியதுமான ஓர் அணுகுமுறையாகவே நான் பார்க்கின்றேன்.

 மாணவர்களின் ஒழுங்காற்று நடவடிக்கை மேற்கொள்ளும் பொழுது அவர் தனிப்பட்ட முறையில் பல எதிர்ப்புக்களை எதிர்கொண்டிருந்தார். ஆனாலும் எதற்கும் அஞ்சாத சிங்கமாக அன்று எமது பாடசாலையில் வலம் வந்த ஓர் ஆசிரியர். மாணவர்களின் வளர்ச்சியிலும்,ஒழுக்கத்திலும்அக்கறை உள்ள ஆசிரியராக திகழ்ந்தவர். இன்றைய சமூகச் சீரழிவுக்கு இப்படியான ஆசிரியர்கள் அவசியம் என்பதை உணர்கின்றேன். ஒவ்வொருவருக்கும் இரண்டு பக்கங்கள் இருக்கும். 

அவர் தொடர்பாக பல விமர்சனங்களும் உள்ளன. அரசியல் ரீதியாகவும் அவரும் நானும் எதிர்திசை அரசியலைக் கொண்டவர்கள் இருந்த போதிலும் உண்மையாகவும், நேர்மையாகவும் இந்த சமூகத்திற்கு உழைத்த ஆசிரியர்களை நினைவு கூற வேண்டும் என்கின்ற ஒரு உயர்ந்த நோக்கத்துடன் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் ஒரு சோலையை உருவாக்கியுள்ளேன்.

 அச்சோலைக்கு ஆனந்தச் சோலை என்றும் அதேவேளை முழு மனதோடு கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் அதை சமர்ப்பிக்க விரும்புகிறேன். இச்சோலையில் 12 செவ்விளநீர் உட்பட 60 தென்னை மரங்களும் பலன்தரும் பழமரங்களும் அழிந்துவரும் அரியவகை மரங்களுமாக 110 சேர்த்து இச்சோலையை அமைத்துள்ளேன்.

 நன்றி 

 முகநூல்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!