பதவியேற்பின் பின்னர் மாலைதீவு ஜனாதிபதியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள்!
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#Maldives
Mayoorikka
2 years ago
மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (17) அந்நாட்டு தலைநகர் மாலேயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார். பதவியேற்பு நிகழ்விற்கு பின்னர் இலங்கை - மாலைதீவு ஜனாதிபதிகள் சந்தித்ததுடன் மொஹமட் முய்சுவுக்கு ஜனாதிபதி வாழ்த்துத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மாலைதீவின் புதிய ஜனாதிபதிக்கிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.