சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

#SriLanka #IMF
PriyaRam
2 years ago
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் உதவியின் கீழ் இரண்டாவது தவணை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் கிடைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

குறுகிய கால இலாப நோக்கம் இன்றி, வீழ்ச்சியடைந்துள்ள தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான நீண்ட கால வேலைத்திட்டத்தின் மேலும் ஒரு ஆரம்பத்தையே இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் எடுத்துக்காட்டுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

images/content-image/2023/11/1700296331.jpg

மேலும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் அதற்கு அவசியமான திட்டங்கள் உட்பட கொள்கைகள் மிகவும் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சிலர் இதனை தேர்தலுக்காக முன்வைக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் என்கின்றனர் எனவும் சுட்டிகாட்டியுள்ளார்.

ஆனால் இது அவ்வாறு தேர்தலை எதிர்பார்த்து சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் அல்ல என்றும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!