யாழில் இரத்த புடையன் பாம்பு தீண்டி 04 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழில் இரத்த புடையன் பாம்பு தீண்டி 04 பிள்ளைகளின்  தந்தை உயிரிழப்பு!

யாழில் இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் மயக்கமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நான்கு பிள்ளைகளின் தந்தையார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  

கைதடி மத்தியைச் சேர்ந்த 55 வயதுடைய அருச்சுணன் சுந்தரலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இவர் கடந்த 31 ஆம் திகதி மாலை 4.00 மணியளவில் மனைவியுடன் தோட்டத்தில் களை பிடுங்கியதாக தெரிவிக்கப்பட்டது.  

இதன்போது இரத்தப்புடையன் பாம்பு அவரை கையில் தீண்டியதை அடுத்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் மயக்கம் அடைந்த நிலையில் காணப்பட்டார்.  

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த (16.11) ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இம்மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணையினை மேற்கொண்டார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!