23 வருடங்களுக்கு பிறகு கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்திற்கு கிடைத்த வெற்றி!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜஸ்ரின் ஜனனி என்ற மாணவி 160 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
2000ம் ஆண்டுக்கு பிறகு அதாவது 23 ஆண்டுகளுக்கு பிறகு இம்முறை ஒரு மாணவி பாடசாலைக்கு மேற்படி பெருமை சேர்த்து தந்துள்ளார்.
பள்ளிக்கு தனது வழக்கமான வருகை, அதிபர் மற்றும் பெற்றோரின் முயற்சியே தனது வெற்றிக்கு காரணம் என மாணவி தெரிவித்துள்ளார்.
மேலும், மற்ற மாணவர்களும், பெற்றோர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த மாணவி கேட்டுக் கொண்டுள்ளார்.
பரீட்சையில் தோற்றிய நான்கு மாணவர்களில் ஒரு மாணவர் 144 புள்ளிகளையும் மற்ற இருவர் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர்.