யாழில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
யாழில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை!

யாழில் பயிர் சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கு முதற்கட்ட இழப்பீடாக 389 மில்லியன் ரூபாவை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க காப்புறுதி சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதன்படி நாளை (19.11) அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 250 விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு பருவக்காலப்பகுதியில்  வறட்சியால் 65,000 ஏக்கர் சேதம் அடைந்ததுடன், தொடர்ந்து பெய்த கனமழையால் 11,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்திருந்தன. 

இதன் காரணமாக இந்த வருட இறுதிக்குள் பயிர் சேதத்திற்கான இழப்பீடுகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். 

பொதுவாக ஒரு பயிர்ச்செய்கையின் போது ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஒரு வருட கால அவகாசம் தேவைப்படுகின்ற போதிலும், இவ்வருடம் வரட்சியினால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களை விதிவிலக்காகக் கருத வேண்டுமென அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!