சுற்றிவளைப்புக்காக சென்ற அதிகாரிகள் மீது பெற்றோல் ஊற்றி தீவைக்க முயற்சி : பெண்கள் உள்பட 09 பேர் கைது!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
சுற்றிவளைப்புக்காக சென்ற அதிகாரிகள் மீது பெற்றோல் ஊற்றி தீவைக்க முயற்சி : பெண்கள் உள்பட 09 பேர் கைது!

போதைப்பொருள் சோதனைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு பெற்றோல் ஊற்றி தீவைக்க முயற்சித்த சம்பவம் ஒன்று கொம்பஞ்சவீதிய, வகந்தவத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. 

இந்நிலையில் பொலிஸ் அதிகாரிகள் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர், பின்னர் சம்பவம் தொடர்பாக மூன்று பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, அவரை கைது செய்வதற்காக கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் நிலைய கட்டளைத்தளபதி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று கடந்த 16 ஆம் திகதி 5757 கொம்பஞ்சாவீதிய வத்த பகுதிக்கு சென்றுள்ளது. 

அங்கு மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளுடன் வந்த சந்தேக நபர், மற்றுமொரு நபருடன் வீடொன்றிற்குள் பிரவேசித்ததையடுத்து, அவர்களை கைது செய்ய பொலிஸார் வீட்டுக்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.  

அப்போது, ​​வீட்டில் இருந்த இரண்டு பெண்கள், பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை சுற்றிவளைத்து அடிக்க வேண்டும் என கூச்சலிட்டுள்ளனர். அத்துடன் அவர்களை சுற்றிவளைத்து அடிக்க முயற்சித்ததுடன், கூட்டத்தில் ஒருவர் பொலிஸார் அதிகாரி ஒருவர் மீது பெற்றோல் ஊற்றி எரிக்கவும் முற்பட்டுள்ளார். 

இந்நிலையில்  அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. 

பின்னர் கொம்பஞ்சாவீதிய பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று பொலிஸ் அதிகாரிகளை தாக்க முயன்ற மூன்று பெண்கள் உட்பட 9 பேரை கைது செய்தனர். எனினும் போதைப்பொருள் வியாபாரியும் அவருடன் இருந்த மற்றைய நபரும் சம்பவத்தை அடுத்து பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றதுடன் அவர் வந்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  

சம்பவத்தின் போது பெற்றோல் உட்கொண்டதால் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.  

மற்ற அதிகாரி சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறினார். இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!