முல்லைத்தீவில் பாடசாலை, வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்த வெள்ளம்! எடுக்கப்பட்ட நடவடிக்கை

#SriLanka #weather #Rain #Mullaitivu #Flood
Mayoorikka
2 years ago
முல்லைத்தீவில் பாடசாலை, வர்த்தக நிலையங்களுக்குள் புகுந்த வெள்ளம்!  எடுக்கப்பட்ட நடவடிக்கை

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக பெய்த கன மழையால் வீதிகளில் நீர் தேங்கி நின்று வர்த்தக நிலையங்கள் பாடசாலை , வீடுகளுக்குள் புகுந்தமையால் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தது.

images/content-image/2023/11/1700266756.jpg

 தற்பாெழுது நிலவும் சீரற்ற காலநிலையால் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதனால் புதுக்குடியிருப்பு நகரில் பாரிய அளவில் நீர் தேங்கி பாரிய அழிவுகளை அப்பகுதிசார் வர்த்தகர்களிற்கு, பாடசாலைகளிற்கு, மக்களிற்கு ஏற்படுத்தியுள்ளது. 

images/content-image/2023/11/1700266776.jpg

இதனால் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும், வர்த்தகர்களும், அப்பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

images/content-image/2023/11/1700266792.jpg

 இதனையடுத்து தக்க நேரத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினர், புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர், பொலிஸார் இணைந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வாய்க்காலினை நீர் வடிந்து ஓடும்படி சீர் செய்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது.

images/content-image/2023/11/1700266817.jpg

images/content-image/2023/11/1700266835.jpg
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!