கிளிநொச்சி மத்திய கல்லூரியில் அனுஷ்டிக்கப்பட்ட அமரர் ஆனந்தராஜ் அவர்களின் நினைவுநாள்
இன்று கிளிநொச்சி மத்திய கல்லூரியின் வரலாற்று அடையாளமான ஆங்கில ஆசான் அமரர் ஆனந்தராஜ் அவர்களுக்கான 36வது நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நினைவு நாளிலே அன்னாரின் திருஉருவ படத்திற்கு அஞ்சலி மற்றும் தீப ஆராதனை காட்டப்பட்டது. ஏராளமான பழைய மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர்.

குறிப்பாக இந்த பாடசாலையிலேயே ஆசிரியர்களாக இருக்கக்கூடிய பழைய மாணவர்களும் கிளிநொச்சி மாவட்ட செஞ்சிலுவை சங்க தலைவர் சேதுபதி அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சேதுபதி அவர்களால் அமரர் ஆனந்தராஜ் ஆசியருக்கு ஒரு நினைவு உரை ஆற்றப்பட்டது. அவரது உரையில் அந்த காலத்தில் ஆனந்தராஜ் அவர்களுடைய சிறப்பான வழிகாட்டல் தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.

இந்நினைவு தினத்தில் சுவிஸ் நாட்டில் வசிக்கும் அவரது மாணவரான சுதாகரனின் அனுசரணையில் ஏற்கனவே நடப்பட்டிருந்த மரக்கன்றுகளுக்கு மேல் இன்று 50க்கும் மேல் மரங்கன்றுகள் நடப்பட்டது.
நடப்பட்ட மரக்கன்றுகள் அனைத்தும் பாடசாலையில் இருக்கும் சாரண படை அணியிடம் ஒப்படைக்கப்பட்டது.

35 ஆண்டுகளுக்கு பின்பும் அமரர் ஆனந்தராஜ் அவர்களை இந்த பாடசாலை நினைவு கூர்ந்து உண்மையிலேயே பாராட்டத்தக்கது.




