தெற்கு காசாவிற்குள் நுழைய தயாராகும் இஸ்ரேல் ராணுவம்

#Attack #Israel #War #Soldiers #Military #Hamas #Gaza
Prasu
1 year ago
தெற்கு காசாவிற்குள் நுழைய தயாராகும் இஸ்ரேல் ராணுவம்

காசாவில் இஸ்ரேல் தொடுத்துள்ள போர் 6-வது வாரத்தின் இறுதியை எட்டியிருக்கிறது. இந்த போரில் இரு தரப்பிலும் 12 ஆயிரத்துக்கு அதிகமானோர் இதுவரை பலியாகி இருக்கின்றனர்.

வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தரைவழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் முக்கியமாக வடக்கு காசாவில் உள்ள ஆஸ்பத்திரிகளை முற்றுகையிட்டு ஹமாஸ் அமைப்பினரை தேடி வருகிறது.

இதில் அல்-ஷிபா ஆஸ்பத்திரிக்குள் நேற்று முன்தினம் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் மருத்துவமனை அறைகளை முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இவ்வாறு வடக்கு காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக தேடுதல் வேட்டை நடத்திய இஸ்ரேல் ராணுவம் அடுத்தாக தெற்கை குறி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பாக தெற்கு காசா நகர வீதிகளில் இஸ்ரேல் ராணுவம் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு வருகிறது. அதில், பயங்கரவாதிகளின் வசிப்பிடங்களில் இருந்து வெளியேறுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

 பயங்கரவாதிகளின் வசிப்பிடங்கள் அல்லது அவர்களுடன் காணப்படும் மக்களின் உயிர் அபாயத்தில் தள்ளப்படும் என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!