நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை!
#SriLanka
#Parliament
#Court Order
#Economic
PriyaRam
2 years ago
கிரிக்கட் நிறுவனம் மற்றும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் இரண்டு வகையாகப் பேசுவதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தமக்கு பாதகமான தீர்ப்புகள் வரும்போது அதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், சாதகமாக தீர்ப்பு வரும்போது அதை முன்னிலைப்படுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிக்க எவருக்கும் உரிமை இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.