பந்துலவும் பொருளாதார குற்றவாளியே - அநுர காட்டம்!

#SriLanka #Bandula Gunawardana #AnuraKumaraDissanayake #Economic
PriyaRam
2 years ago
பந்துலவும் பொருளாதார குற்றவாளியே - அநுர காட்டம்!

பொருளாதார குற்றவாளிகள் பட்டியலில் அமைச்சர் பந்துல குணவர்த்தனவையும் சேர்க்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

“மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, அஜித் நிவாட் கப்ரால், உள்ளிட்டவர்கள் தான் பொருளாதார குற்றவாளிகள் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தற்போது இன்னொருவரையும் இதில் சேர்க்க வேண்டும். அவர் தான் அமைச்சர் பந்துல குணவர்த்தன. ஏனெனில், இவர்தான் பொருளாதாரம் தொடர்பாக இந்த நாடாளுமன்றில் அதிக தடவை கதைத்துள்ளார்.

images/content-image/2023/11/1700219683.jpg

எனவே, தனது பெயர் இந்தப்பட்டியலில் இல்லாதமையை நினைத்து பந்துல கவலையடைகிறாரோ தெரியவில்லை.

அத்தோடு, நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்றமை தொடர்பாக ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

ஆனால், உயர்நீதிமன்றின் தீர்ப்போடு இந்தத் தெரிவுக்குழு பயனற்றதாகிவிட்டது. இதனால், இந்தத் தெரிவுக்குழுவை கலைக்க வேண்டும் என நான் சபாநாயகரிடம் கேட்டுக் கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!