வரலாற்றில் முதற் தடவையாக சாதனை படைத்த யாழ். இந்து மகளிர் கல்லூரி!

#SriLanka #Jaffna #Student #Tamil Student #School Student #Examination
Mayoorikka
2 years ago
வரலாற்றில் முதற் தடவையாக சாதனை படைத்த யாழ். இந்து மகளிர் கல்லூரி!

யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரிஆரம்ப பிரிவைச் சேர்ந்த ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா என்ற மாணவி 2023 ஆம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளை பெற்று யாழ். மாவட்டத்தில் அதிக புள்ளியினை பெற்று வரலாற்றில் முதற் தடவையாக யாழ். இந்து மகளிர் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் சிவந்தினி வாகீசன் தெரிவித்துள்ளார்.

 2023 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு எமது கல்லூரியில் இருந்து 110 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 35 மாணவர்கள் பரீட்சையில் சித்தி அடைந்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். 

images/content-image/2023/11/1700215928.jpg

அதிலும் வரலாற்றில் முதன்முதலாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக புள்ளிகளை பெற்று எங்கள் பாடசாலை மாணவி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக பாடசாலை அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

 பரிட்சையில் அதிக புள்ளியினை பெற்ற மாணவி கருத்து தெரிவிக்கையில், தன்னை போன்று எதிர்காலத்தில் மாணவர்கள் அதிக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமையை சேர்க்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் தான் விஞ்ஞானியாக வந்து இலங்கைக்கு பெருமை சேர்ப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!