அலி சப்ரி கையில் முழு அதிகாரத்தையும் கொடுத்துள்ள ரணில்!
#SriLanka
#Srilanka Cricket
#Ali Sabri
PriyaRam
2 years ago
ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாடுவதற்கான முழு அதிகாரத்தையும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சரவை உப குழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாடுவதற்கு, அது தொடர்பில் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு அனுமதி கோரியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.