இலங்கை கடனை செலுத்தாவிட்டால் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்!

#SriLanka #America #Bandula Gunawardana #Court
Mayoorikka
2 years ago
இலங்கை கடனை செலுத்தாவிட்டால் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்!

எரிமலையின் மேல் வாணலியை வைத்து சொசேஜஸ் பொரிக்கும் இனம் நாம் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

எரிமலை வெடித்தால் யாரும் மிச்சமிருக்க மாட்டார்கள் என்றும் குணவர்தன கூறினார்.

 பாராளுமன்றத்தில் இன்று (17) நடைபெற்றுக்கொண்டிருக்கும் வரவு-செலவுத் திட்டம் மீதான, நான்காம்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போ​தே ​மேற்கண்டவாறு தெரிவித்தார்.

images/content-image/2023/11/1700207347.jpg

 தற்போதைய கடன் தொகை முப்பத்தாறு பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவித்த அமைச்சர், இருபது வருடங்களின் பின்னர் கடன் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

 யாராக இருந்தாலும் இந்தக் கடனைச் செலுத்துவதற்கு அரசாங்கம் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பதாகவும், கடனை செலுத்தாவிட்டால், அமெரிக்காவின் ஹாமில்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் குணவர்தன கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!