மயிலத்தமடு பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு நடாத்தியவர்கள் கைது!

#SriLanka #Batticaloa #Cow
Mayoorikka
2 years ago
மயிலத்தமடு பகுதியில் கால்நடைகள் மீது  துப்பாக்கி சூடு நடாத்தியவர்கள் கைது!

மட்டக்களப்பு மேச்சல்தரை மாதவனை மயிலத்தமடு பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு நடாத்திவந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் இருவரை வியாழக்கிழமை (16) கைது செய்துள்ளதுடன் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

 குறித்த மேச்சல்தரை பகுதியில் தொடர்ச்சியாக பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது இனம் தெரியாதோர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கால்நடைகளை கொன்றுவந்துள்ளதுடன் கால்நடைகளின் வாயை குறிவைத்து பன்றிவெடிகளை வைத்து வாயை கிழித்து வந்துள்ளனர்.

 இது தொடர்பாக கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துவந்துள்ள நிலையில் வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவதினமான வியாழக்கிழமை (16)மேச்சல்தரை பகுதியில் துப்பாகியுடன் உலாவிதிரிந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் இருவரை மடக்கிபிடித்து கைது செய்தனர்.

 இதில் கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!