சிங்கப்பூர் நிறுவனத்துடன் இணைந்து முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இலங்கை - நடைமுறையாகவுள்ள சட்டம்!

#SriLanka #Singapore
PriyaRam
2 years ago
சிங்கப்பூர் நிறுவனத்துடன் இணைந்து முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இலங்கை - நடைமுறையாகவுள்ள சட்டம்!

இலங்கையில் வாசனை பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது, மசாலா பொருட்கள் மற்றும் அது தொடர்பான பொருட்களை விற்பனை செய்யும் உற்பத்தியாளர்கள் தர சான்றிதழைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல், குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் இலங்கையின் வாசனை பொருட்களுக்கு அதிக கேள்வி நிலவுகின்ற போதிலும், வாசனை பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டம் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதன் காரணமாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வாசைன பொருள் ஏற்றுமதியாளர்கள் அந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரியவந்துள்ளது.

images/content-image/2023/11/1700197703.jpg

மசாலா பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினரின் வாசனை பொருட்களுக்கான தர உத்தரவாத திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர வாசைன பொருள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் சந்தைப்படுத்தல் சபைக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி, மசாலா மற்றும் தொடர்புடைய தயாரிப்புகள் சந்தைப்படுத்தல் வாரியம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சிங்கப்பூரின் SGS நிறுவனத்துடன் இணைந்து முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. 

உலகின் பல நாடுகளில் உள்ள மக்கள் மிளகு, ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை போன்ற வாசனைப் பொருட்களை இலங்கையின் பிரதான தோட்டப்பயிர்களில் பயன்படுத்துகின்ற போதிலும், சில மோசடி வியாபாரிகள் இலங்கையின் வாசனைப் பொருட்களுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!