ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாடொன்றிற்கு பயணமானார்!
#SriLanka
#Ranil wickremesinghe
#Maldives
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவுக்கு பயணித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மாலைதீவுக் குடியரசின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கலாநிதி மொஹமட் முய்சுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி ரணில் சென்றுள்ளார்.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கலாநிதி மொஹமட் முய்ஸுவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி பைடன், ஜனாதிபதி குழுவை அனுப்புவார் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
மாலைதீவு குடியரசு சதுக்கத்தில் நவம்பர் 17ஆம் திகதி குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.
இவ்விழாவில் ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.