தரக்குறைவான எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாக சஜித் குற்றச்சாட்டு!

#SriLanka #Sajith Premadasa #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
தரக்குறைவான எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாக சஜித் குற்றச்சாட்டு!

தரக்குறைவான எரிபொருள் இறக்குமதி நடைபெறுவதாக அண்மையில் பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தியபோதும்,  குறித்த எரிபொருள் ஏற்கனவே  சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று (16.11) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். 

இந்த தரக்குறைவான எரிபொருள் நல்ல எரிபொருளுடன் கலந்து சந்தையில் பயன்பாட்டில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது என்றும்,  இங்கு ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதால் இதற்கு பொறுப்பான அமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் இது குறித்து வெளிப்படுத்திய போது,  பத்திரிகை செய்தி ஒன்றை மேற்கோள் காட்டி வெளிப்படுத்தியதாக தன் மீது குற்றம் சுமத்தியதாகவும்,  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்திய தகவலின் அடிப்படையிலேயே தாம் இந்த தகவலை அன்று சமர்ப்பித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!