பிரான்ஸ் பரிஸில் காவல் துறையினர் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி
#Police
#France
#Protest
#Lanka4
#பொலிஸ்
#ஆர்ப்பாட்டம்
#லங்கா4
#Palestine
#supporters
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பரிசில் நாளை சனிக்கிழமை இடம்பெற உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு பரிஸ் காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
நாளை, நவம்பர் 4 ஆம் திகதி இந்த ஆர்ப்பாட்டம் பரிசில் இடம்பெற உள்ளது. பிற்பகல் 2 மணிக்கு Place de la République பகுதியில் ஆரம்பமாகும் ஆர்ப்பாட்டம் மாலை 7 மணி அளவில் Place de la Nation பகுதியில் சென்று நிறைவடையும். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பரிஸ் காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

அதேவேளை, 'எந்த ஒரு சகிப்புத் தன்மைகளுக்கும் இடமில்லை!' எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
முன்னதாக, நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 'உடனடி போர்நிறுதம் அறிவிக்கவேண்டும்!' என போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.