பிரான்ஸின் பரிஸ் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
#France
#Lanka4
#தீ_விபத்து
#fire
#லங்கா4
#பிரான்ஸ்
#France Tamil News
#Tamil News
Mugunthan Mugunthan
2 years ago
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் ஏற்பட்ட தீ பரவலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று புதன்கிழமை மாலை இத்தீபரவல் இடம்பெற்றுள்ளது. rue de Pondichéry வீதியில் உள்ள ஏழு அடுக்குகள் கொண்ட கட்டிடத்தில் நள்ளிரவின் போது திடீரென தீ பரவியுள்ளது.

கட்டிடத்தின் முதலாவது தளத்தில் பரவிய தீ, மிக வேகமாக கட்டிடத்தின் ஏனைய தளங்களுக்கும் பரவியது.
தீயணைப்பு படையினர் துரிதமாக செயற்பட்டு தீயை கட்டுப்படுத்த போராடினர். இச்சம்பவத்தில் தீக்குள் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.